பசியில்லையா? பத்து விஷயங்களில் கவனம்!
அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் பசியின்மை தொடர்ந்தால், அது நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதுபோன்ற சூழலில் மருத்துவரை
அணுகி ஆலோசனை பெறுவது நல்லது’’ என்னும் ஊட்டச்சத்து நிபுணர் வாணி, பசியை அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம் என்று விளக்குகிறார்.
உணவில் மசாலாப் பொருள்களை அதிகமாகச் சேர்த்தால் பசி உண்டாகும். உதாரணமாக, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு போன்றவை உடலின் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். பொதுவாக உணவு செரிமானமாக உடலிடமிருந்து அதிக உழைப்பை எதிர்பார்க்கும். உடல் சக்திக்கான இந்தத் தேவை அதிகரிக்கும்போது, பசி உணர்வு தூண்டப்படும். இத்தகைய சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக உணவு உட்கொண்டால் பசி உணர்வு அதிகரிக்கும்.
உணவு இடைவேளையின்போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. ஆனால், அவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. அதிக கலோரிகள் கொண்ட சீஸ், முட்டை, டார்க் சாக்லேட், நட்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிடுவது உடல் செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
மோர், பழைய சாதம், கஞ்சி, சூப் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் உள்ள சத்துகள் பசி உணர்வை அதிகப்படுத்துவதுடன், உடல் வளர்ச்சியைச் சீராக்கும்.
மன அழுத்தமும் மன இறுக்கமும் பசியின்மைக்கான முக்கியமான காரணங்களாகும். நாம் செய்ய வேண்டிய வேலைகளை எழுதி வைத்து அட்டவணைப்படுத்திச் செய்தால், இறுக்கமான சூழலில் இருந்து விடுபடலாம். மேலும் ஆழ்ந்து யோசிப்பதைத் தவிர்ப்பது, தேவையற்றக் குழப்பங்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பது போன்றவையும் பசியின்மையில் இருந்து விடுபட உதவும்.
பெரும்பாலும் நம்மில் பலர் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை. ஆகவே நேரத்துக்குச் சாப்பிடப் பழக வேண்டும். குறிப்பிட்ட நாள்கள் அட்டவணையைப் பின்பற்றினால் அது பழக்கமாகிவிடும். இது பசியின்மை பிரச்னையைப் போக்கி, உடலைச் சீர்படுத்தும்.
சாப்பிடும் முன், நீராகாரங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றை நிறைத்துப் பசியைக் குறைத்துவிடும். போதிய அளவு சாப்பிடாமல் அவர்களுக்குத் தேவையான அளவு கலோரிகள் கிடைக்காமல் போகும்.
கெட்ட கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை, ஒருபோதும் சாப்பிடக் கூடாது. ஸ்நாக்ஸ் உட்கொள்ளும் பலர் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளையே சாப்பிடுகின்றனர். இது வயிறு மந்தமாக வழிவகுக்கும். ஆகவே, நல்ல கொழுப்பு நிறைந்த வாழைப்பழம், சீஸ், ஆப்பிள், தயிர் சாப்பிடலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள கலோரிகள் முழுமையாகக் குறையும். அப்போது, பசி அதிகரிக்கும்.
மனதுக்குப் பிடித்த, கெட்ட கொழுப்புச்சத்து இல்லாத உணவை நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். சரியான நேரத்தில் சரியான உணவை, திருப்தியுடன் சாப்பிடுவதன் மூலம் இறுக்கமான சூழலில் இருந்து எளிதில் விடுபடலாம்.
துத்தநாகம், தயாமின் போன்றவை குறைந்திருந்தால், பசி உணர்வும் குறையும். குறிப்பிட்ட காலத்துக்குப் பசியின்மை பிரச்னை தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்

No comments:
Post a Comment