என்ன சத்தம் இந்த நேரம்!
உயிரியல் கடிகாரம்
தூக்கத்தின் நடுவில் விழித்துக் கொள்வது ஒரு சாதாரண நிகழ்வுதான் என்றாலும், ஒவ்வொரு நாள் இரவிலும் குறிப்பிட்ட அதே நேரத்தில் விழிப்பு ஏற்பட்டு, அசவுகரியமாக உணர்ந்தால், அதை சாதாரணமாக விட்டுவிட முடியாதே.
ஒருவர் விழித்துக் கொள்ளும் நேரம், அவரது உடல் உறுப்போடு சம்பந்தப்பட்டதாக பலநூறு ஆண்டுகளாக சீனர்கள் பயன்படுத்தி வரும் உயிரியல் கடிகாரம் சொல்கிறது. குறிப்பிட்ட உறுப்பு சரிவர இயங்கவில்லை எனில், அந்த உறுப்போடு தொடர்புடைய நேரத்தில், தூக்கம் தடைபட்டு விழிப்பு ஏற்படும் என்கின்றனர்.
சீன மருத்துவத்தில் உயிரியல் கடிகாரமான ‘Chi’ நாள் முழுவதும் உடலினுள் இயங்கக்கூடியது. அதன்படி ஒவ்வொரு உறுப்பும் தன்னுடைய அதிகப்படியான இயக்கத்துக்கு பிரத்யேகமாக 2 மணிநேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த இயக்கத்தில் ஏதேனும் தடை ஏற்படுமாயின், அந்த உறுப்பின் ஆற்றல் குறையும்.
தூக்கம் தடைபடும் சரியான நேரத்தைக் கொண்டு எந்த உறுப்பு பாதிப்படைந்துள்ளது என்பதை கண்டுபிடித்துவிடலாம்.இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரையிலான காலத்தில், இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. நாளமில்லாச் சுரப்பிகளின் வேலையை சமநிலைக்குக் கொண்டுவந்து தூக்கத்தை தூண்டச் செய்கின்றன. இந்த மெக்கானிசம் சரிவர இயங்கவில்லை எனில், தூக்கம் வர தாமதமாகும்.
இரவு 11 மணியிலிருந்து 1 மணி வரை பித்தப்பை ஆற்றலுடன் இயங்கும் நேரம். உணவு செரிமானத்துக்கு முக்கிய தேவையான பித்தநீர் கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சென்று சேரும். இந்த நேரத்தில் உடல் மறுஉருவாக்கம் அடைகிறது. அந்த நேரத்தில் உங்களுக்கு தூக்கம் தடைபட்டு வலியை உணர்வீர்களானால் உங்களுக்கு பித்தப்பையில் பிரச்னைகள் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
1 மணி முதல் 3 மணி வரை கல்லீரலுக்கான நேரம். இந்த நேரத்தில் கல்லீரல் பித்தநீரை அதிகப்படியாக சுரந்து நச்சு நீக்கும் பணியில் ஈடுபடுகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் முக்கியமான பணி நடைபெறும் இந்த நேரத்தில், ஒருவருக்கு தூக்கம் தடைபடுமானால், அவருக்கு நிச்சயம் கல்லீரல் பிரச்னை இருக்கும்.
அதிகாலை 3 மணி முதல் 5 வரை நுரையீரல் இயங்கும் நேரம். நுரையீரல் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சேகரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையைச் செய்கிறது. சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அதிகாலை தூக்கம் தடைபடும்.காலை 5 மணி முதல் 7 மணிக்குள்ளான நேரத்தில் பெருங்குடல் சுத்தப்படுத்தும் தன் வேலையை தொடங்கி விடுகிறது.
குடல் இயக்கம் சரிவர இயங்காதவர்கள் மலம் வெளியேறுவதில் சிரமப்
படுவார்கள்அதிக நீரைப் பருகி, குடலை சுத்தப்படுத்திக்கொள்ளத் தவறினால், மறுநாள் நாம் விரும்பிய உணவை உண்ண முடியாமல் தவிப்பது நிச்சயம். இந்த உயிரியல் கடிகாரத்தைப் பார்த்து நாள் முழுவதும் உங்கள் செயல்பாடுகளை நெறிப்படுத்திக் கொள்ளலாம்
No comments:
Post a Comment